புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் உடனடியாக இடைநிறுத்தம்!

Date:

நடந்து முடிந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில் 3 கேள்விகள் பரீட்சைக்கு முன்னரே வெளியானது தொடர்பில் எழுந்து சர்ச்சைகளை தொடர்ந்து பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே குறித்த 3 வினாக்களுக்கும் உரிய மொத்த புள்ளிகளைகளையும் மாணவர்களுக்கு வழங்குவது என கல்வி அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்திருந்த போதிலும் குறித்த 3 கேள்விகள் மட்டுமல்லாது மொத்தமாக 8 கேள்விகள் பரீட்சைக்கு முன்னரே வெளியானதாக பெற்றோர் முன்வைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டதாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த 8 வினாக்கள் தொடர்பாக ஆதராங்களுடன் முன்வைக்குமாறு பெற்றோரை கேட்டிருப்பதாகவும் இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் அது தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் விசாரணைகளை தொடர்ந்து மாணவர்களுக்கு பெருமளவில் அநீதி ஏற்படாதாவாறு தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அதுவரை தற்காலிமாக விடைத்தாள்கள் திருத்தும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...