2024 ஆம் ஆண்டு மதிப்பீட்டுக்கமைய நாட்டில் 6,762,644 வீட்டுக் கூறுகளும், 46,376 கூட்டு வதிவிடங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு, புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பின் “கட்டிட” நிரல்படுத்தலுக்கமைய நாட்டில் மொத்தமாக 8,377,895 கட்டிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ரீதியான வீட்டுக்கூறுகளின் பரம்பலில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவாக 751,585 வீட்டுக்கூறுகளும், மன்னார் மாவட்டத்தில் குறைந்தளவாக 38,999 வீட்டுக்கூறுகளும் பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.