இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது; உலக வங்கி

Date:

இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது என தெரிவித்துள்ள உலக வங்கி சீர்திருத்தங்களை தொடர்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளது.

2024 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதமாக காணப்படும் என தெரிவித்துள்ள உலக வங்கி முன்னைய எதிர்வுகூறல்களை விட இது முன்னேற்றகரமான நிலையென குறிப்பிட்டுள்ளது.

தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் நான்கு காலாண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் முக்கியமான கட்டமைப்பு மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுமே இதற்கு காரணம் என உலக வங்கிதெரிவித்துள்ளது.

எனினும் பொருளாதார மீட்சி இன்னமும் பலவீனமான நிலையிலேயே உள்ளது என குறிப்பிட்டுள்ள உலக வங்கி நுண்பொருளாதார ஸ்திரதன்மையை பேணுதல், கடன்மறுசீரமைப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்வது, வருமானத்தை அதிகரித்து வறுமையை குறைப்பதற்காக  கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுப்பது ஆகியவற்றிலேயே பொருளாதார மீட்சி தங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...