இலங்கை அரபு எழுத்தணி கழகத்தின் இரண்டு நாள் எழுத்தணி பயிற்சி வெற்றிகரமாக நிறைவு

Date:

இலங்கை அரபு எழுத்தணி கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் அரபு எழுத்தணி பயிற்சி செயலமர்வு நிறைவு பெற்றது.

26, 27ஆம் திகதிகளில் இரத்மலானை நெஸ்ட் எகடமியில் நடைபெற்ற இந்த பயிற்சி செயலமர்வில் ஜாமி நளீமியா (பேருவளை), மக்கியா அரபுக்கல்லூரி (காலி), தீனியா அரபுக் கல்லூரி (பான துற ) இ தாருல் உலூம் அரபுக் கல்லூரி (மொரட்டுவ- எகொடவின), ஹூமைதியா அரபுக் கல்லூரி ( ஊறுகொடவத்த – கொழும்பு), ஈமானிய அரபுத் கல்லூரி ( திஹாரி) ஆகிய நிறுவனங்களில் இருந்து  28 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் வளவாளர்களாக நாவலப்பிட்டி தாருல் உலூம் ஹாஷிமியா அரபுக் கல்லூரின் விரிவுரையாளர் அல்ல- ஆலிம் எஸ் மஜீம் யூசுப் (இந்தியா) மற்றும் மூதூர் ரப்புதுல் ஜன்னா அரபுக்கல்லூரின் விரிவுரையாளர் அல்- ஆலிம் என்.எம். சில்மி நூரி அவர்களும் கலந்துகொண்டனர்.

அரபுக்கல்லூரி இறுதி வருட மாணவர்களை இலக்காகக் கொண்டு தொடர்ந்து  பல பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதுடன் சுமார் 200 – 300 மாணவர்கள் பயிற்றுவிக்கப்படவுள்ளனர்.

அவர்களிலிருந்து  20 -50 மாணவர்கள் 2025ம் ஆண்டு ஏற்பாடு செய்யப்படவுள்ள ஆறு மாத பயிற்சி நெறியில் பங்கு கொள்ள தகுதி பெறுவர். இப்பயிற்சி நெறி சர்வதேச பயிற்றுவிப்பாளர்களது உதவியோடு ஏற்பாடு செய்யப்படும்.

இலங்கை அரபு எழுத்தணி கழகம் 2017ம் ஆண்டு நிறுவப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...