வாகன இறக்குமதி தொடர்பான முக்கியத் தகவல்!

Date:

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில், வாகன இறக்குமதிக்காக ஆண்டுக்கு சுமார் 1,100 டொலர்கள் செலவிடப்பட்டதாகவும் ஆனால் அதன் மூலம் நாட்டுக்கு சுமார் 250 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நாட்டின் டொலர் கையிருப்பைப் பாதுகாக்க வாகன இறக்குமதியை நிறுத்திய போது வரி வருமானமும் இழக்கப்பட்டுள்ளதுடன் அப்போது ஒரு டொலரின் மதிப்பு சுமார் 200 ரூபா ஆகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்திடம் ஊடகமொன்று வினவியுள்ள நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுமென அந்த சங்கம் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...