வெளிநாட்டு தூதரகங்களில் பணிபுரியும் அரசியல்வாதிகளின் உறவினர்கள் தொடர்பில் நடவடிக்கை!

Date:

வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களிலும் உயர்ஸ்தானிகராலயங்களிலும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் உறவினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் உடனடியாக தவல்களை வழங்குமாறு கேட்டிருப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் சிறிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சரவையின் முடிவுகளை அறிவிப்பதற்காக புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக நிமியக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்திடம் ஊடகவியலாளர் ரிப்தி அலி கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

முன்னைய அரசாங்க காலங்களில் பல்வேறு அரசியல்வாதிகளினதும் புதல்வர்களும் உறவினர்களும் வெளிநாட்டு தூதுரகங்களின் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பதை நாங்கள் அறிவோம். இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தூதுவர்களாக பொறுப்பேற்றுள்ளவர்கள்  நிறைவேற்ற வேண்டிய கடமைகள் அவர்கள் முன் இருப்பதாகவும் தூதுவர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...