ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் மர்ஜான் பளீல்!
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசியப் பட்டியல் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட நாமல் ராஜபக்சவும் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், தேசியப் பட்டியலில் தொழிலதிபர் மர்ஜான் பளீல் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் , பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் உள்ளிட்டோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.