ஆறு தொடர் வெற்றிகளுடன் ஹொங்கொங்கை அரையிறுதியில்  சந்திக்கும் இலங்கை!

Date:

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி, நேற்று மாலைதீவுகள் அணியை 80-32 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குழு நிலைப் போட்டிகளில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியுறாத அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுக்கொண்டது.

இந்தியாவின் பெங்களூரு கோரமங்கலம் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (25) நடைபெற்ற A குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் நடப்புச் சம்பியனான இலங்கை அணி, மாலைதீவுகள் அணியை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் ஆரம்ப முதலலே தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, முதலாவது காலிறுதியை 18 – 7 எனவும், இரண்டாவது காலிறுதியை 25 – 6 எனவும் தனதாக்கிக்கொண்டது. இதற்கு அமைய இடைவேளையின்போது 43 – 13 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் நடைபெற்ற 3ஆவது காலிறுதியிலும் அபாரமாக ஆடிய இலங்கை வீராங்கனைகள் 21 – 11 புள்ளிகள் கணக்கிலும், 4ஆவது காலிறுதியை 16 – 8 புள்ளிகள் கணக்கிலும் கைப்பற்றியது. இறுதியில் 80 – 32 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

இலங்கை சார்பாக திசலா அல்கம 50 முயற்சிகளில் 48 கோல்களையும், ஹசித்தா மெண்டிஸ் 26 முயற்சிகளில் 17 கோல்களையும், ஷானிக்கா பெரேரா 16 முயற்சிகளில் 12 கோல்களையும், ரஷ்மி பெரேரா 5 முயற்சிகளில் 3 கோல்களையும் போட்டனர். இலங்கை அணியில் இடம்பெற்ற 12 வீராங்கனைகளுக்கும் மாலைதீவுகள் அணிக்கெதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படடமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இம்முறை ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி ஏ குழுவில் இடம்பிடித்திருந்ததுடன், முதல் போட்டியில் பிலிப்பைன்ஸை 73-43 புள்ளிகளால் வீழ்த்தியிருந்ததுடன், தொடரந்து நடைபெற்ற போட்டிகளில் சவூதி அரேபியாவை 115-5 புள்ளிகளாலும், இந்தியாவை 81-31 புள்ளிகளாலும், ஜப்பானை 85-18 புள்ளிகளாலும், மலேசியாவை 72-40 புள்ளிகளாலும் இலகுவாக தோற்கடித்தன.

இதன்படி, இன்று (26) மாலை நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஹொங்கொங்கை நடப்பு ஆசிய சம்பியன் இலங்கை எதிர்த்தாடவுள்ளதுடன், இரண்டவாது அரையிறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியன்களான சிங்கப்பூரும் மலேசியாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

1989ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரை பொறுத்தமட்டில் இலங்கை வலைப்பந்தாட்ட அணி 6 தடவைகளும், சிங்கப்பூர் 3 தடவைகளும், மலேசியா 2 தடவைகளும் ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

B.F.M Rishad

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...