இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் விசேட அறிவிப்பு!

Date:

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சலுகை காலம் 2024 ஒக்டோபர்  08  முதல் 2025 ஜனவரி 08 வரை  03 மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லெபனானின் தற்போதைய போர் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, லெபனானுக்கு வந்த பின்னர் அதே பதிவை புதுப்பிக்காமல் நீண்ட காலமாக பணியில் இருக்கும் இலங்கை பணியாளர்களுக்கு இந்த சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் தூதரகத்திற்கு வந்து  பதிவுகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும்  அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் பேசப்படாத தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள்

-ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். பகுதி-1 இலங்கையில் தேசிய பாதுகாப்பு இன்னும் பெரும்பாலும்...

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு...

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...