சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம்

Date:

ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன்  தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை  சர்வதேச நாணய நிதியத்தின்  பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், இந்த விஜயம் ஒக்டோபர் இரண்டாம் மற்றும் நான்காம் ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க  மற்றும் புதிய பொருளாதார குழுவை குறித்த உயர்மட்ட குழு சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...

மத்தியக் கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள்...