தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!

Date:

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்துள்ளதாக கூறப்படுவதோடு, ஏனைய வினாக்கள் கசிந்துள்ளமைக்கான ஆதாரம் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான தகவல்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளதாக எழுந்துள்ள பிரச்சினையை கருத்தில் கொண்டு, விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...