படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் தரப்பால் உறுதிப்படுத்தப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யஹ்யா சின்வாரின் உடல் ஒரு மறைவான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேநேரம் அவருடைய இறந்த உடல் மரண பரிசோதனை செய்யப்பட்டு மறைவான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு எதிர்காலத்தில் இந்த உடலை வைத்து ஹமாஸ் இயக்கத்தோடு பேரம் பேசுவதற்கு ஒரு துரும்பாக இவர்கள் பயன்படுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மரண விசாரணை அறிக்கை தகவலின் படி, சின்வார் அவர்களுடைய தலையிலே மிகத்தூரமாக இருந்து துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுதாகவும் அவரது உடலில் பல்வேறு இடங்களிலும் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் அதனாலேயே அவர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார்.
இதையடுத்து ஹமாஸ் படையின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார்.
இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.