தேர்தல் பிரசார செலவு விபரம்: இதுவரை 18 வேட்பாளர்களே அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்!

Date:

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட  வேட்பாளர்கள் தமது பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

குறித்த அவகாசம் இன்று (13) பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டத்தின்படி, ஜனாதிபதி தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் செலவு அறிக்கைகளை வழங்க வேண்டும்.

எவ்வாறாயினும், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோற்றிய 38 வேட்பாளர்களில் 18 வேட்பாளர்களே இதுவரை தமது செலவின அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏனைய வேட்பாளர்கள் தங்களது செலவு அறிக்கையை இன்று வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டத்தின்படி செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...