நாளைய தினம் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Date:

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நேற்று மற்றும் இன்று மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் தேவையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை 16 மாவட்டங்களில் 69 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 158, 391 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலையால் இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 240 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 1,753 குடும்பங்களைச் சேர்ந்த 9, 663 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து...

கொழும்பில் ‘முஸ்லிம் நட்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026’ !

மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் சுற்றுலாத்...

உழ்ஹிய்யா கடமை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய வழிகாட்டல்

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, இஸ்லாத்தின் முக்கிய சுன்னத்தான உழ்ஹிய்யா (குர்பானி)  நிறைவேற்றுவது...

ஆண்டுதோறும் 15,000 க்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள்...