புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு!

Date:

சர்ச்சைக்கு உள்ளான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று (14) தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய 03 கேள்விகளுக்கு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்காக 07 பேர் கொண்ட விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்தது.

இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமையினால் பிரச்சினையான சூழ்நிலை உருவானதுடன், பரீட்சைகள் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சையில் சில கேள்விகளை பரீட்சைக்கு முன்னர் கசியவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியர் ஒருவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...