மௌபிம ஜனதா கட்சியில் இணைந்த மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர்!

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன மற்றும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோர் இன்று (03)  மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.

கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து அவர்கள் மௌபிம ஜனதா கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு பிரவேசித்த  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க, தாயக மக்கள் கட்சியின் கேகாலை மாவட்ட மற்றும் தெதிகம அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனா, பொலன்னறுவை மாவட்ட தாயக மக்கள் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்ட இணைப்பாளராக சமிந்து குமாரசிங்கவும், கண்டி மற்றும் உடுநுவர மாவட்ட இணைப்பாளராக தக்சில பிரேமசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...