மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்த இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இன்று செவ்வாய்கிழமை (15) மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

ஆரம்பமாக மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து பீட மகா நாயக்க  சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பின்னர் அஸ்கிரிய மகா விகாரைக்கு விஜயம் செய்து அஸ்கிரிய பீட மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்புகளில் எதிர்க்கட்சியின் முன்னாள் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட முதன்மை வேட்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...