வெள்ளப்பெருக்கினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

Date:

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் கிருமி தொற்றுகள் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால்  விரைவில்  சிகிச்சை பெறுமாறு பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முறையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அத்தியாவசியமானது  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நாட்களில் உண்ணும் உணவுகள் சுத்தமாகவும், புதியதாகவும், சூடாகவும் தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சுட்டாறிய நீரை  அல்லது போத்தலில் அடைக்கப்பட்டுள்ள நீரை அருந்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...