சோழன் உலக சாதனை படைத்த சிறுமி ஸீனத் பஸ்லி!

Date:

காத்தான்குடியைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவி ஸீனத் பஸ்லி 3 நிமிடம் 14.செகண்ட்டில் 140 பெருக்கல் கணக்குகளை அபாகஸ் முறை மூலம் தீர்வெழுதி சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்வு நேற்று (15) செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் மட்டக்களப்பு காத்தான்குடி மீரா பாலிகா தேசியபாடசாலையில் இடம்பெற்றது.

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் இணைந்து நடத்திய இந்நிகழ்வில்  குறித்த சிறுமி 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் 100 கணக்குகளையும் 3 நிமிடம் 18 விநாடிகளில் 140 கணக்குகளையும் அபாகஸ் முறை மூலம் தீர்வெழுதி சோழன் உலக சாதனையை படைத்திருந்தார்.

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளை தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமை இடம்பெற்ற இந் நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக ‘அஷ்ஷெய்க். யு எல் . மன்சூர் (SLPS1) அதிபர், மட்/ மீரா பாலிகா தேசிய பாடசாலை, காத்தான்குடி, றிஷாட் ரஹீம் Country Head – SIP Abacus Sri Lanka) சிறப்பு விருந்தினராக இன்ஷாப் நவாஸ் (Business Development Manager SIP Abacus Sri Lanka), நிருஷினி பிரதீபன் (SLPS,SLEAS,SLTES) , பிரதி அதிபர், மட்/மம/மீரா பாலிகா தேசிய பாடசாலை, காத்தான்குடி, ஜேசுதாசன் மோசஸ் உறுப்பினர், பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன், யாசீர் அரபாத் BBA அதிபர், கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...