2024 நாடாளுமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்!

Date:

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04) காலை முதல் ஆரம்பமாகிறது.

வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி இன்று முதல் ஒக்டோபர் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும்.

வேட்புமனு தாக்கல் செய்யப்படும் முதல் நாளான இன்று முதல் இறுதி நாள் வரை எவ்விதமான ஊர்வலங்களோ, பேரணிகளோ மற்றும் குழுக்களாக ஒன்றுகூடலோ முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், பொதுத் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட முக்கிய நிறுவனங்களின் பிரதானிகளுடனும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்வதிலிருந்து தேர்தல் நடைபெறும் தினம் வரை மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் அரசாங்க அச்சகத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், இதுவரை 37 குழுக்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதாக அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

11 ஆம் நண்பகல் 12.00 மணிக்குப் பிறகு, வேட்புமனுத் தாக்கல் மற்றும் அனைத்து குழுக்களுக்கும் ஆட்சேபனை தெரிவிக்க ஒரு மணி நேரம் அனுமதிக்கப்படும். தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும், புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21 ஆம் திகதி கூடும்

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...