இன்றையதினமும் (08) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence Zone) (வட அரைக்கோளம் மற்றும் தென் அரைக்கோளம் ஆகியவற்றிலிருந்து வரும் காற்று ஒடுங்கும் வலயம்) நாட்டின் வானிலையில் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்தியுள்ளதால் இந்நிலைமை ஏற்பட்டுள்தாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.