தாமரை கோபுரத்திலிருந்து குதித்து உயிரிழந்த மாணவி தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்!

Date:

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்பட்ட பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் சாதாரண உடையில் தாமரை கோபுரத்திற்கு வந்த பாடசாலை மாணவி, அங்கிருந்த காவலர்களை தவிர்த்துவிட்டு அந்த இடத்திலிருந்து கீழே குதித்து தவறான முடிவெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அவரது பையில் இருந்து பாடசாலை சீருடை, புத்தகம் மற்றும் தொலைபேசி ஆகியவை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், மற்றொரு இடத்தில் அவரது  காலணிகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளார்.

அத்துடன், தாமரை கோபுரத்தில் உள்ள சிசிரிவி காட்சிகள் அவர் தவறான முடிவெடுப்பதற்கு வந்ததை உறுதி செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஜூலை இரண்டாம் திகதி அல்டையர் அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இரு மாணவர்களின் நெருங்கிய நண்பர் எனவும்முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த சிறுமி தனது நண்பர்களின் மரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.

மூன்று மாணவர்களும் கொழும்பு சர்வதேச பாடசாலையில் ஒன்றாக கல்விப் பயின்றுள்ளனர். இதன் படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...