ஐந்து மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

Date:

இலங்கையின் ஐந்து மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கு நாளை (01) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறித்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்குவதற்கு அந்தந்த மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுகள்  தீர்மானித்துள்ளன.

இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாளைய தினம் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த நாளுக்கான கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி (சனிக்கிழமை) முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...