Saudi Agriculture Expo 2024 கண்காட்சி: தென்னைப் பொருட்களை உற்பத்தி செய்யும் 10 இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பு!

Date:

Saudi Agriculture Expo 2024 கண்காட்சி கடந்த 21 முதல் 24 வரை சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில் தென்னை தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் 10 இலங்கை நிறுவனங்கள் முதல் தடவையாக பங்குபற்றின.

இதன்போது ‘கண்காட்சியில்10 இலங்கை நிறுவனங்களின் முதல் பங்கேற்பை ஏற்பாடு செய்து, திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தென்னைப் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் இலங்கை நிறுவனங்கள் சிறந்த வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் ஓ.எல்.அமீர் அஜ்வத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இக்கண்காட்சிக்கு, மன்னர் அப்துல் அஸீஸின்  நிர்வாகக் குழுத் தலைவரும், சவூதி அரேபியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அமைச்சகத்தின் துணை நிரந்தரச் செயலருமான டாக்டர். ஃபர்ஹான்,  சவூதி அரேபிய வர்த்தக சம்மேளனத்தின் துணைத் தலைவரும் சவூதி NAF குழும நிறுவனங்களின் தலைவருமான அல்ஷெய்கி மற்றும் ஃபயேஸ் அல்-ஷாஹீலி ஆகியோர் ஆகியோர் இலங்கை சார்பான கண்காட்சியில் பார்வையிட்டனர்.

41வது Saudi Agriculture Expo 2024  கண்காட்சியில் 29 நாடுகளில் இருந்து 370க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...