நாளை இடம்பெறவுள்ள எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

Date:

எல்பிட்டிய  பிரதேச சபைத் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இதன்படி தேர்தலுக்கு தேவையான வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் இன்றையதினம் (25) உரிய வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும் 48 வாக்குச்சாவடிகளில் 55,643 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு வாக்காளர் பதிவுப் பட்டியலின்படி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாளையதினம் (26) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகளுக்காக தமது அதிகாரிகளை ஈடுபடுத்த உள்ளதாக PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி   தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...