முதற்கட்டமாக 75,000 கடவுச் சீட்டுக்கள் விநியோகம்!

Date:

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதால்,இதுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள 75,000 கடவுச்சீட்டுக்களை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டு தட்டுப்பாடு மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல மாதங்களாக கடவுச் சீட்டுக்குத் தட்டுப்பாடு நிலவியது.இந்நிலையில்,புதிய கடவுச்சீட்டுக்கள் நாட்டுக்கு வந்துள்ளதால், நேற்று முன் தினம் முதல் இவை விநியோகிக்கப்படுகின்றன.

கரு நீல நிறத்தைக் கொண்ட புதிய சாதாரண கடவுச்சீட்டானது 48 பக்கங்களைக் கொண்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

புதிய கடவுச்சீட்டின் உட் பகுதிகளில் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க பல முக்கிய இடங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

 

கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல் முறையாக மேற்கொள்ளப்படும். இது தொடர்பில், அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து...

கொழும்பில் ‘முஸ்லிம் நட்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026’ !

மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் சுற்றுலாத்...

உழ்ஹிய்யா கடமை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய வழிகாட்டல்

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, இஸ்லாத்தின் முக்கிய சுன்னத்தான உழ்ஹிய்யா (குர்பானி)  நிறைவேற்றுவது...

ஆண்டுதோறும் 15,000 க்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள்...