அக்குரணையில் மீண்டும் வெள்ளம்..!

Date:

வங்காள விரிகுடாவில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடுமையான மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, அக்குரணை பிரதேசம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அக்குரணை 6ஆம் கட்டை, கண்டி- யாழ்ப்பாணம் வீதி, வெள்ளத்தில் மூழ்கி வருவதாகவும் பிரதேசத்தில் உள்ள கட்டடங்களில் இருந்து பொருட்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,  எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று மாலை வேளையில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...