13, 14 ஆம் திகதிகள் பாடசாலைகளுக்கு விடுமுறை !

Date:

எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதால் முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக 13 ஆம் திகதி  அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமையும் 14 ஆம் திகதி வியாழக்கிழமையும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் 18 ஆம் திகதி பாடசாலைகள் மீள  ஆரம்பிக்கப்படும்.

இந்தத் தீர்மானம் குறித்து  தேர்தல்கள் ஆணைக்குழு, மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 12 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் பாடசாலைகள் ஒப்படைக்கப்படும்.

தேர்தல் பணிகளுக்காக பாடசாலை மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டபங்களை வழங்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும்  கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.எம்.திலகா ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கையின் அடிப்படையில், வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத்திய வங்கிக்கு இரு புதிய பிரதி ஆளுனர்கள்

மத்திய வங்கிக்கு இரு புதிய பிரதி ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதியமைச்சர் என்ற...

கானா தங்க மோசடியில் தொடர்பு; ஹிஸ்புல்லாஹ் எம்.பி மறுப்பு

​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்...

சூடான் இராணுவத்தின் முக்கிய நிலையை துணை இராணுவப் படையான ஆா்.எஸ்.எஃப் கைப்பற்றியது.

சூடான் இராணுவத்தின் முக்கிய நிலையை துணை இராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கைப்பற்றியது. அந்த...

நாட்டின் பல இடங்களில் 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல முறை மழை...