கருணா – பிள்ளையான் தரப்பிடையே மோதல்

Date:

மட்டக்களப்பில் (Batticaloa) விநாயகமூர்த்தி முரளிதரனின் (Vinayagamoorthy Muralitharan) (கருணா) கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது சிவனேசத்துரை சந்திரகாந்தன் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03.11.2024) இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், “மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பாடசாலை வீதியில் ஜனநாயக முன்னணி கட்சியான கருணா அம்மானின் கட்சியின் வேட்பாளரின் காரியாலயத்தின் முன்னாள் உள்ள வீதியில் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, அந்த பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் அங்குள்ள மதில்களில் ஒட்டப்பட்டிருந்த கருணா அம்மானின் கட்சி வேட்பாளர்களது சுவரொட்டிகளுக்கு மேல் பிள்ளையானின் கட்சி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இதன்போது கருணா தரப்பின் வேட்பாளர் சென்று எங்கள் சுவரொட்டிகளுக்கு மேல் சுவரொட்டிகளை ஒட்டவேண்டாம் என தெரிவித்த நிலையில் இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இதனையடுத்து கருணா தரப்பின் ஆதரவாளர் படுகாயமடைந்ததையடுத்து பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி

காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும்...

அமைச்சர் விஜித ஹேரத் சவூதி பயணம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்...

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு: பாராளுமன்றில் ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அதற்காக...

2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான...