தகுதியின் அடிப்படையிலே அமைச்சரவை நியமனம்: அமைச்சரவையில் முஸ்லிமொருவர் இல்லாதது பற்றி ரிஸ்வி சாலிஹ் விளக்கம்

Date:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தகுதியையும் திறமையையும் அரசியல் நுணுக்கத்தையும் கருத்தில் கொண்டே அமைச்சு பதவிகளை வழங்கியிருக்கிறது. மாற்றமாக இனத்தையோ மதத்தையோ பாலினத்தையோ கொண்டல்ல என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஸ்வி சாலிஹ் தெரிவித்துள்ளார்.

இம்முறை நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் இல்லாதமை தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்தே ரிஸ்வி சாலி சமூக ஊடகத்தில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

உரிய அமைச்சுக்களுக்கு  சரியான நபர்களையே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் அனைவரையும் விட திறமை மற்றும் பங்களிப்புகள் உள்ள ஒருவரினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற இந்த தெரிவு தகுதியின் அடிப்படையிலே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத அடிப்படையில் நியமனம் வழங்கப்படுவது என்று கூறுவது நாடு ஒற்றுமையை நோக்கி நகர்கின்ற போது அதற்கு பாதகமாக எண்ணெய் வார்ப்பது போல அமையும்.

நாங்கள் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தது அனைவருக்குமான சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்கு இருப்பதனாலேயே. இன மத பேத வித்தியாசங்களை பாராது பிரிக்க நினைக்காமல் நாங்கள் அரசாங்கத்துக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...