தேர்தல் தினத்தன்று ஞானசார தேரருக்கான இறுதி தீர்ப்பு வழங்கப்படுமா?

Date:

இஸ்­லாத்தை அவ­ம­தித்­த குற்றச்சாட்டின் கீழ் பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்­தி­வைக்­கப்­படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குறித்த தீர்ப்பு நாளை நவம்பர் 14ஆம் திகதி வழங்­கு­வ­தாக‌ கொழும்பு மேல­திக நீதவான் பசன் அம­ர­சேன கடந்த செப்­டம்பர் 26 ஆம் திகதி அறி­வித்திருந்தார்.

எனினும் நாளை 14 ஆம் திகதி தேர்தல் தினம் என்­பதால், நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லேயே இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஏற்­க­னவே நாளைய தினம் 14 ஆம் திக­திக்­கு­ரிய வழக்­கு­களை பிறி­தொரு தினத்­துக்கு மாற்றி உயர் மற்றும் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றங்கள் அறி­வித்தல் அனுப்­பி­யுள்ள நிலையில் மேல் மற்றும் நீதிவான் நீதி­மன்­றங்­க­ளிலும் பெரும்­பாலும் அதே நடை­முறை பின்­பற்­றப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன. எனினும் அது குறித்த உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு வெளி­வ­ர­வில்லை.

எனவே பெரும்­பாலும் 14 ஆம் திகதி பதில் கட­மை­களை முன்­னெ­டுக்க பதில் நீதிவான் ஒரு­வரே கட­மை­களில் இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளதால், ஞான­சார தேர­ருக்கு எதி­ரான வழக்கின் தீர்ப்பு இன்­னு­மொரு தினத்­துக்கு ஒத்தி வைக்­கப்­ப­டலாம் என தெரி­கின்­றது.

‘இஸ்லாம் ஒரு புற்றுநோய்’ என ஞான­சாரதேரர் வெளி­யிட்ட கருத்­துக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் ரிகாஸ் முன்­வைத்த முறைப்­பாட்­டுக்கு அமைய கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் மேல­திக நீதிவான் (3 ஆம் இலக்க அறை) முன்­னி­லையில் வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கில் சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு, முறைப்­பாட்­டாளர் தரப்பின் சாட்­சி­யாளர் உள்­ளிட்ட சாட்­சி­யா­ளர்கள் நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில், குறித்த வழக்கை சுமு­க­மாக முடித்­துக்­கொள்ளும் நோக்கில் தனது சேவை பெறுநர் நீதி­மன்றில் பகி­ரங்க மன்­னிப்பு கோர தயா­ராக இருப்­ப­தாக ஞான­சார தேரரின் சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

source:vidivelli

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...