தேர்தல் விதிமீறல் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஹரின் பெர்னாண்டோ!

Date:

அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 11 ஆம் திகதி பதுளையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்  தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் அமைதி காலத்தில் பதுளை நகரில் அவர் பேரணி சென்று மேலங்கியை கழற்றி எரிந்து பொலிஸாருக்கு சவால் விடுத்த சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சர்வதேச கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸியின் 10 எண் கொண்ட ஜெர்சியை ஒத்த டி-சர்ட்களை அணிந்திருந்த ஹரின் பெர்னாண்டோவின் ஆதரவாளர்களின் அரசியல் பிரச்சாரத்தை நிறுத்த முயன்றதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

தேர்தல் ஆணைய அதிகாரிகள்  பொலிஸார் தலையிட்டு  மறைமுகமான தேர்தல் பிரச்சாரமாக கருதிய டி-சர்ட்களை அகற்றுமாறு ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...