நாட்டில் சீரற்ற காலநிலை: காற்றின் வேகம் அதிகரிப்பு

Date:

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மிகப் பலத்த மழைவீழ்ச்சியும் கடும் காற்றும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

திணைக்களத்தினால் இன்று (26.11.2024) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நவம்பர் 25ஆம் திகதி  தென்கிழக்காக மட்டக்களப்பிலிருந்து ஏறத்தாழ 290 கிலோ மீற்றர் தூரத்திலும் திருகோணமலையிலிருந்து ஏறத்தாழ 410 கிலோ மீற்றர் தூரத்திலும் நிலை கொண்டிருந்தது.

இத் தொகுதி வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து நாட்டின் கிழக்குக் கரைக்கு மிக அண்மையாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...