பல இடங்களில் மாலையில் இடியுடன் மழை..!

Date:

இன்றையதினம் (19) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புக் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வட மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் .

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

Popular

More like this
Related

‘Rebuilding Sri Lanka’ நிதியத்தில் வெளிநாட்டு வைப்பீடுகள் அதிகரிப்பு

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உருவாக்கப்பட்டுள்ள ‘Rebuilding...

நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர்,...

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ...

நாச்சியாதீவு மக்களுக்கு சிங்கள சகோதரர்களது மனிதாபிமான உதவி

நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் அனுராதபுர மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றான...