பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் மழை!

Date:

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (04) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென்மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென்மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...