வெள்ள பாதிப்பு: தேசிய ஷூரா சபையின் அவசர வேண்டுகோள்

Date:

அதிக மழை காரணமாக உருவான வெள்ளத்தாலும் கடும் காற்று மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களாலும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. பலர் தமது உடமைகளை இழந்து தற்காலிக இடங்களில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், நாம் பின்வரும் முறைகளில் நடந்து கொள்ள வேண்டும் என தேசிய ஷூரா சபை வேண்டிக் கொள்கிறது.

1.உளநிலை ஆறுதல்:

பாதிக்கப்பட்டவர்களைப் பொறுமையுடன் இருக்கச் செய்ய அவர்களுக்கு உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். இதனை அல்லாஹ்வின் சோதனையாக கருதுவதுடன், அவனுடைய நாட்டத்தை ஏற்றுக்கொள்வது நன்மைகளைத் தரும் என்ற வகையிலும் இந்த உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் உள்ள உளவள ஆலோசகர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பான நிறுவனங்கள் இப்பணியை மேற்கொள்ளலாம்.

2. அவசர தேவைகள் பூர்த்தி:
நிலைமை சற்று மோசமடைந்திருப்பதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள், ஆடைகள், மருத்துவ உதவிகள், உணவு போன்ற அடிப்படைத் தேவைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே இந்த நற்பணியில் ஈடுபட்டிருக்கின்ற சமூக சேவை அமைப்புகளும் மற்றும் தனியாரும் தமது பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும்.

3. அநாவசிய செலவுகளை தவிர்ப்பது:
பொருளாதார நெருக்கடிகள் நாட்டில் நிலவுவதன் காரணமாக, குறிப்பாக இந்த அனர்த்த நிலைகளின் பொழுது மக்கள் கணிசமான தொகையினர் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், குறிப்பாக தனவந்தர்கள் பணக்காரர்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து நிவாரண உதவிகளுக்குப் பெருமளவில் பங்களிக்க வேண்டும். அல்குர்ஆனின் படி,வீண் செலவு செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாவர்.

4. செயல்பாடுகளில் ஒன்றுபாடு:
நிவாரண உதவிகளை சேகரித்தல், களஞ்சியப்படுத்தல், மற்றும் விநியோகம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடும் அமைப்புகள் ஒருமித்த திட்டமிடலுடன் செயல்பட வேண்டும். தமக்கிடையே தகவல்களையும் நிவாரண வேலை திட்டங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நேரம் மற்றும் வளங்கள் வீணாகமலிருக்க இந்த ஒருமித்த முயற்சி அவசியமாகும்.

5. துஆவின் அவசியம்:
பாதிக்கப்பட்டவர்களுக்கு உள நிம்மதி, பொறுமை, மற்றும் நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றும் நிவாரணப் பணிகளுக்காக தம்மை அர்ப்பணித்துள்ள தனிமனிதர்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்துக்கும் அல்லாஹ்வின் நன்மை கிடைக்க பிரார்த்தனை செய்ய வேண்டுமென தேசிய ஷூரா சபை வேண்டிக் கொள்கிறது.

 

 

 

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...