நீரில் மூழ்கி பலியான மத்ரஸா மாணவர்கள்: வெள்ளைக் கொடி கட்டி துக்கம் அனுஷ்டிப்பு

Date:

வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிந்தவூ காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் முழு நேரமாக கல்வி கற்று வந்த அனைத்து மத்ரசா மாணவர்களுக்கும் காலநிலை சீற்றத்தின் காரணமாக கடந்த 26 செவ்வாய்க்கிழமை  விடுமுறை வழங்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் சம்மாந்துறை பகுதியை சேர்ந்த மாணவர்கள் தமது பிரதேசத்திற்கு செல்லும் வழியில் காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்தடியில் வெள்ள அனர்த்தத்தில் அகப்பட்டு மரணமடைந்த சம்பவமானது முழு நாட்டையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களுக்காக அம்பாறை மாவட்டம் நிந்தவூர், மாவடிப்பள்ளி, சம்மாந்துறை,பகுதிகளில்  வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கக் கூடிய அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் இன்றையதினம் (29) குத்பாக்களிலும் ஷஹீதுகளுடைய அந்தஸ்து தொடர்பாக குத்பா உரை நிகழ்த்தப்பட இருப்பதுடன்  ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து மரணமடைந்த மாணவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடாத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...