மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்ஸு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யப்போகிறார் என்ற தகவலை இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாட் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுடன் நடந்த சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்டது.
சந்திப்பில், மாலைத்தீவு மற்றும் இலங்கையின் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர்.
இரு நாடுகளின் சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி போன்ற பல்வேறு துறைகள் குறித்து இந்த உரையாடல் நடைபெற்றதாக இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான மாலைத்தீவு பிரதி உயர்ஸ்தானிகர் பாத்திமத் கினாவும் கலந்து கொண்டார்.