வினாத்தாள்கள் கசிவதை தடுக்க வினாத்தாள் வங்கி

Date:

பரீட்சைகளின் போது வினாத்தாள்கள், உரிய காலத்திற்கு முன்பே வெளியாவதை  தடுக்கும்  வகையில், விடைத்தாள் வங்கியொன்றை ஸ்தாபிப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டிற்குள்  இந்த வங்கியை ஸ்தாபிக்க முடியும் என்றும்.  இதன் மூலம் விடைத்தாள்கள் உரிய காலத்துக்கு முன்பே வெளியிடுதலை தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்புதிய வேலைத் திட்டத்தின் கீழ், வினாத்தாள் தயாரிப்பு நடவடிக்கைகள் நபர்களின் கைகளுக்கு செல்லாமல், கணினி மூலம் மேற்கொள்ளப்பட்டு பரீட்சை விடைத்தாள்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பரீட்சைகள் நடைபெறுவதற்கு முன்பே, பரீட்சை வினாத்தாள்கள் வெளிவரும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.

நபர்களிடம் வைக்கப்படும் நம்பிக்கை காரணமாகவே இத்தகைய தவறுகள் இடம் பெறுகின்றன. எனினும் எந்த வகையிலும் அது பரீட்சை முறையில் காணப்படும் சிக்கல்கள் அல்ல என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் போது, பரீட்சை வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரே வெளியாகும் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேவையான தொழில்நுட்பம் தற்போது கைவசம் உள்ளது. இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வினாத்தாள் வங்கி ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...