இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், புதிய இரத்திரனியல் அடையாள அட்டைகளில் தனி நபர்களை அடையாளப்படுத்தும் உயிரியல் பண்புகளான கைவிரல் அடையாளம், விழித்திரை, குருதி மாதிரிகள் உள்ளடக்கப்படுமென்றும் ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த இலத்திரனியல் அடையாள அட்டையின் அறிமுகத்தினால் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள் குறைவடையும் என எதிர்பார்ப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.