ஓரிரு நாட்களில் பிரதி அமைச்சர்கள் நியமனம்: முனீர் முழப்பருக்கு பிரதி அமைச்சு பதவி?

Date:

முன்னைய அரசாங்கங்களின் நடைமுறையில் இருந்து விலகி, புதிய அரசாங்கம் ராஜாங்க அமைச்சர்களை நியமிக்க மாட்டாது, ஆனால் அதற்கு பதிலாக 26-28 பிரதி அமைச்சர்களை ஓரிரு நாட்களில் நியமிக்கும் என்று அமைச்சர் ஒருவர் நேற்று (18) தெரிவித்தார்.

புதிதாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ பிரதி அமைச்சர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் என ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்னதாக நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட கொள்கை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சில அமைச்சரவை இலாகாக்களுக்கு பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்களே தவிர அனைத்து அமைச்சுக்களுக்கும் நியமிக்கப்படமாட்டார்கள். அமைச்சின் செயலாளர்களும் மாற்றப்படுவார்கள், மீண்டும் நியமிக்கப்படுவார்கள் அல்லது புதிதாக நியமிக்கப்படுவார்கள், ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், நிதி அமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவைத்  தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அஷ்ஷெய்க் முனீர் முழப்பருக்கு பிரதி அமைச்சுப் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

109,815  வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய இவர் பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் கல்வி பயின்று பட்டதாரியாகி சக வாழ்வுக்கான பணிகளில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டு வருகிறார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் நளீமி ஒருவர் பாராளுமன்றம் செல்வது இதுவே முதற்தடவையாகும்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...