சர்ச்சைக்குரிய ரவி கருணாநாயக்கவின் தேசிய பட்டியல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

Date:

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பான சர்ச்சைகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அப்பாற்பட்டது.

கட்சியின் உள்விவகாரங்களில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. கட்சியின் செயலாளரால் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு தனது கடமையை நிறைவேற்றியுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய முடியாது எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

ரவி கருணாநாயக்கவை தேசியப் பட்டியலில் எம்.பி.யாக நியமிப்பது குறித்து தேசிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷியாமலா பெரேரா எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.

எனினும், இந்த நியமனம் தன்னிச்சையாக எடுக்கப்பட்டதானால் தற்போது குழப்பநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...