தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை!

Date:

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக  தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சருமத்தில் ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும். குறிப்பாக சருமத்தின் நிறத்தில் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டால் கிரீம் வகைளை பூசாமல் வைத்தியர் ஒருவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சருமத்திற்கு நன்மை அளிக்கும் பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாது தோலில் அரிப்பு, நிறம் மாற்றம், வெடிப்பு மற்றும் ஒவ்வாமை போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெறவேண்டும்.

அத்தோடு, பல்வேறு கிரீம் வகைகளைச் சருமத்தில் பயன்படுத்துவதனாலும் தோல் புற்றுநோய் ஏற்படலாம்.

எனவே வைத்தியரின் ஆலோசனை இன்றி சந்தையில் விற்பனை செய்யப்படும் புதிய கிரீம் வகைகளைப் பயன்படுத்த வேண்டாம் ” இவ்வாறு தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை குழந்தைகளுக்கு உணவளிக்க 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குகிறார் மைக்கேல் கோர்ஸ்.

உணவுத் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக, உலகளாவிய ஆடை வடிவமைப்பு நிறுவனமான மைக்கேல்...

அஸ்வெசும வங்கி கணக்கை திறக்காதவர்களுக்கான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின்...

போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி!

பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள்...