பொதுத்தேர்தலில் பிரசாரங்கள் குறைவு: பெப்ரல் அமைப்பு

Date:

பொதுத்தேர்தலில் 8,888 வேட்பாளர்கள்  போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான  வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில்  ஈடுபட்டுள்ளனர் என பெப்ரல்  அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளா ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதுடன் மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 600,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம்  போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை என தெரிவித்துள்ள ரோஹண ஹெட்டியாராச்சி 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன  என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...