நாடு முழுவதும் தொடரும் மோசமான வானிலையால் உண்டான அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (29) பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிட்ட தகவலின் படி,
மோசமான வானிலையால் நாடு முழுவதும் 132,071 குடும்பங்களைச் சேர்ந்த 441,373 பேர் பாதிக்கப்பட்டனர்.
19 பேர் காயமடைந்தும், ஒருவர் காணாமல் போயுள்ளனர். மோசமான வானிலையால் உண்டான அனர்த்தங்களில் சிக்கி 99 வீடுகளும், 2,082 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.
12,054 குடும்பங்களைச் சேர்ந்த 37,863 பேர் பாதுகாப்பான 338 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.