வெள்ளை வேன் வழக்கு: ராஜித உள்ளிட்ட மூவர் விடுதலை

Date:

வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

2019 ஜனாதிபதித் தேர்தலின் போது வெள்ளை வேன்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தி குறித்த வழக்கு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீண்ட  விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷ்சங்க முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான சாட்சியங்களை உருவாக்குதல், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கக்கூடிய ஊழல் செயலைச் செய்தமை தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...