🛑2024 நாடாளுமன்ற தேர்தல்: வரலாற்றில் இடம் பிடித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய!

Date:

நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக இது கருதப் படுகின்றது.  இதற்கு முன்னர் அதிக விருப்பு வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்தார்.

அவர் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதனை முறியடித்து 6 லட்சத்திற்கும் அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...