ஐ.நா சபையின் பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் நாளை கொழும்பில்..!

Date:

சர்­வ­தேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தின நிகழ்வுகள் நாளை நவம்பர் மாதம் 29 ஆம் திகதி கொழும்பு 07 இல் அமைந்துள்ள லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்போர் கூடத்தில் பிற்பகல் 04.00 மணி முதல் இடம்பெறும்.

இந்நிகழ்வை இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வில், இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்­கத்தின் தலை­வரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்­நா­யக்க கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதரக பதில் தூதுவர் ஹிஷாம் அபு தாஹா, வெளி­வி­வ­கார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத், இலங்­கைக்­கான ஐ.நா. வதி­விட பிர­தி­நிதி Marc-Andre Franche, பேராதனை பல்கலைக்கழக மனித உரிமைகள் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம, பேராதனை பல்கலைக்கழக கலை பீட சிரேஷ்ட பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி ஆகியோர் உரை நிகழ்த்­த­வுள்­ளனர்.

இந்நிகழ்வில், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய ‘பலஸ்தீனம்’ நூல் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்படும்.

இலங்கை பலஸ்தீனம் ஒரு­மைப்­பாட்டு இயக்­கத்தின் பிரதித் தலைவர் ஹனா இப்றாஹிம் நன்­றி­யுரை நிகழ்த்­துவார்.

இந்நிகழ்வில் சகலரையும் கலந்து கொண்டு பலஸ்தீன விடுதலைக்காக குரல் கொடுக்குமாறு ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

1947 ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 181 ஆவது தீர்மானத்தின் மூலம் பலஸ்தீனத்தில் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை நினைவு கூரும் வகையில் வருடா வருடம் நவம்பர் 29 ஆம் திகதியை பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது.

 

 

 

Popular

More like this
Related

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...