பார்வைக் கோளாறுக்கு எதிரான சவூதியின் தன்னார்வ திட்டம்: வலஸ்முல்லயிலும் காத்தான்குடியிலும் வெற்றிகரமாக நிறைவு

Date:

சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவின் அடையாளமாக, உலகளவில் குறைந்த வருமானம் பெறும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்குவதற்கான சவூதி அரசின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கான முக்கிய அங்கமாக, மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம் , இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள காத்தான்குடி அரச மருத்துவமனையில், கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் தன்னார்வத் திட்டத்தை 2024 நவம்பர் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதேபோன்ற ஒரு தன்னார்வத் திட்டம், 2024 நவம்பர் 3 முதல் 9ஆம் திகதி வரை, இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள வலஸ்முல்ல பிரதேசத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தினூடாக பல ஆயிரக்கணக்கான நோயாளர்களைப் பரிசோதித்தல், அவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, தேவைப்படுமிடத்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளல் , தேவையான மருந்துகளை வழங்குதல், வெண்படலங்களை அகற்றுதல், கண்ணீர் குழாய்களில் ஏற்படும் தடுப்புக்களுக்குச் சிகிச்சையளித்தல், நோயாளிகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றை வழங்குதல் போன்ற செயல்பாடுகளும் இடம்பெற்றன.

நவம்பர் 11ஆம் திகதி இத்திட்டத்தின் கீழ், பின்வரும் சேவைகள் வழங்கப்பட்டன:

  • மருத்துவ பரிசோதனைகள்: 3500 நோயாளிகளுக்கு பரிசோதனைகள்.
  • கண்ணாடி விநியோகம்: 550 நோயாளிகளுக்கு மூக்குக் கண்ணாடிகள்.
  • அறுவை சிகிச்சைகள்: 215 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...