புதன்கிழமை முதல் கடவுச்சீட்டு பெற Online பதிவு அவசியம்!

Date:

கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள Online இல் திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்யும் முறைமையை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளமுடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பி.எம்.டி. நிலூஷா பாலசூரிய தெரிவித்தார்.

இந்த இணையவழி முறைமை நாளை மறுதினம் (06) முதல் அமுலுக்கு வரும் எனவும், ஏற்கனவே வரிசைகளில் நின்றவர்களுக்கு இந்த மாதத்திற்கான திகதி, நேர ஒதுக்கீடுகள் வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, டிசம்பர் மாதத்திற்கான திகதி,நேர ஒதுக்கீடுகளை இதன் மூலம் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, அவசரமாக கடவுச்சீட்டை பெற வேண்டிய தேவையுடையவர்கள் அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...